
நாட்டுக்கு பால்மா இறக்குமதிக்கு தேவையான டொலரை நிதியமைச்சு பெற்று தராவிடின் எதிர்வரும் நாட்களில் பால்மா தட்டுப்பாடு தீவிரமடையும் என பால்மா இறக்குமதியாளர் சங்கத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.
டொலர் நெருக்கடி காரணமாக இறக்குமதி செய்யப்பட்டுள்ள அத்தியாவசிய பொருட்களை துறைமுகத்திலிருந்து விடுவிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பால்மாவிற்கான கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டதை தொடர்ந்து பால்மாவின் விலை அதிகரிக்கப்பட்டது.
எனினும் இறக்குமதியாளர்களின் தீர்மானத்திற்கமைய பால்மாவின் விலை அதிகரிக்கப்படவில்லை. அத்துடன் தற்போதைய விலையதிகரிப்பு ஏற்பட்டுள்ள நட்டத்தை ஈடு செய்யும் வகையில் அமையவில்லை.
இந்நிலையில் பால்மா இறக்கமதியின் போது அறவிடப்படும் வரியை இரத்து செய்யுமாறு நிதியமைச்சிடம் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு இதுவரையில் சாதகமான தீர்வு கிடைக்கப் பெறவில்லை என்றும் இறக்குமதியாளர் சங்கத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.