
நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடியை கருத்திற்கொண்டு ஆசிரியர்கள் உள்ளிட்ட அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு அல்லது கொடுப்பனவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் மற்றும் அதிபர்களின் உரிமைகளை வென்றெடுத்த பிரதிநிதிகளின் மாநாட்டில் கலந்துகொண்டபோதே ஜோசப் ஸ்டாலின் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.