
இரண்டு பாரிய குளங்களை சிங்கராஜ வனத்திற்கு அருகே நிர்மாணிப்பதற்காக அரசாங்கம் எடுத்த தீர்மானம் தொடர்பில் பாரிய எதிர்ப்புகள் வெளியிடப்பட்டதை அடுத்து அந்த திட்டம் வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இத் திட்டத்தை நிறுத்துவதற்கு வடிகாலமைப்பு இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ச இணக்கம் வெளியிட்டதாக யுனெஸ்கோ நிறுவனம் தெரிவிக்கின்றது.
அமைச்சருடன் யுனெஸ்கோ அமைப்பின் பிரதிநிதிகள் நடத்திய பேச்சு வார்த்தையை அடுத்து இந்த தகவல் வெளியாகியுள்ளது.
இதேவேளை, சிங்கராஜ வனத்தின் கீழ்ப்பகுதியில் இரண்டு குளங்களை அமைத்து அதன் நீரில் 80 வீதத்தை சீன நிறுவனங்களின் திட்டங்களுக்கும், மிகுதி 20 வீதத்தையே உள்நாட்டு விவசாயிகளுக்கும் வழங்க அரசாங்கம் முயற்சிப்பதாக பௌத்த அமைப்புக்களும், சிவில் அமைப்புக்களும் விமர்சனங்களை முன்வைத்து வந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது,