
சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகளை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவியுடன் முன்னெடுக்ககுமாறு ஜனாதிபதி மாவட்ட செயலாளர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஜனாதிபதி ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
மேலும், குறித்த நிவாரணப் பணிகளுக்கான நிதியை நிதியமைச்சின் ஊடாக ஒதுக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.