
பாடசாலை மாணவர்களின் காலணிகள், புத்தகப் பைகளின் விலை குறைக்கப்படவுள்ளது.
டொலர் மதிப்பு குறைந்துள்ளதாலும் மூலப்பொருட்களின் விலை குறைந்தமையாலும் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மே மாத இறுதியில் இவற்றின் விலையை 500 முதல் 1000 ரூபாய் வரை குறைப்பதற்கு உற்பத்தியாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.