கொரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளாகிய நிலையில் தற்போது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர சிகிச்சைப் பெற்று வருகிறார்.
இவ்வாறாக சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் உயிரிழந்துவிட்டதாக தற்போது சமூக வலைத்தளங்களில் இருந்து போலித் தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன.

எனினும் அவர் கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையொன்றில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகின்றார்.
அவரது உடல்நிலை தற்போது தேறிவருவதாகவும், பெரும்பாலும் நாளை அல்லது நாளை மறுதினம் சாதாரண நோயாளர் பிரிவுக்கு மாற்றப்படுவார் என்றும் மங்கள சமரவீரவுக்கு நெருங்கிய சகா தெரிவித்தனர்.