
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, குடும்பத்தினருடன் சித்திரைப் புத்தாண்டைக் கொண்டாடிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.
இதன்போது மகிந்தவின் பாரியார் சிரந்தி ராஜபக்ச மற்றும் மகிந்தவின் மூத்த புதல்வரான நாமல் ராஜபக்ச, இளைய புதல்வர், மருமகள், பேரப்பிள்ளைகள் ஆகியோர் இணைந்து புத்தாண்டை வரவேற்றுள்ளனர்.