
இலங்கையின் நட்சத்திர குறுந்தூர ஓட்ட வீரரான யுபுன் அபேகோன் 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் தேசிய ரீதியில் சாதனை படைத்துள்ளார். இத்தாலியில் இடம்பெற்று வரும் சவோனா தடகள போட்டிகளில் அவர் இந்த சாதனையை படைத்துள்ளார்.
இவர் 100 மீட்டர் தூரத்தை 10.15 விநாடிகளில் கடந்தே இந்த சாதனையை படைத்துள்ளார்.