பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பிரதமர் பதவியிலிருந்து இராஜினாமா செய்யவுள்ளதாக சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் பரவலாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சில நாட்களுக்கு முன்னரும் இன்றையதினமும் இவ்வாறான செய்திகள் வெளிவந்துள்ளன.
இந்நிலையில் அந்த செய்தியில் எவ்விதமான உண்மையும் இல்லையென பிரதமர் அமைச்சின் அலுவலகம் அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் பிரதமர் இராஜினாமா என்ற செய்தியில் எவ்விதமான உண்மையும் இல்லையென பிரதமரின் ஊடகச் செயலாளர் ரொஹான் வெலிவிட்ட தெரிவித்துள்ளார்.
