
இன்று (வியாழக்கிழமை), கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட ஓமடியாமடு வேழமுகன் வித்தியாலயத்தை மீண்டும் திறக்கக் கோரி கல்குடா வலயக் கல்வி பணிமனைக்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
சுமார் 38 மாணவர்கள் கல்வி கற்கும் குறித்த பாடசாலையில் தரம் ஒன்று தொடக்கம் தரம் ஐந்து வரையான வகுப்புகள் உள்ள நிலையில், கடந்த 03 வாரங்களாக குறித்த பாடசாலைக்கு அதிபர் ஒருவர் நியமிக்கப்படாமையினால் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாதமையினாலேயே குறித்த பாடசாலை மூன்று வாரங்களாக திறக்கப்படாத நிலையில் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் மாணவர்களின் கல்வி நடவடிக்கை முற்றாக பாதிக்கப்படுவதாக தெரிவித்தே பெற்றோர்கள் மற்றும் மாணவர்களினால் இவ் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.