
எதிர்வரும் மே மாதத்தில், 2022ஆம் கல்வியாண்டுக்குரிய கல்விப்பொதுத் தராதர பத்திர சாதாரண தரப் பரீட்சையை நடத்துவதற்குத் தீர்மானித்திருப்பதாக கல்வியமைச்சின் செயலாளர் நிஹால் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
இவ் ஆண்டுக்குரிய உயர்தரப் பரீட்சை மற்றும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையினை இவ்வருடம் நிறைவடைவதற்கு முன்னர் நடத்துவதற்கு எதிர்பார்ப்பதாகவும் 2022ஆம் ஆண்டிற்குரிய கல்விப் பொதுத் தராதர பத்திர சாதாரண தரப் பரீட்சைகளுக்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் 28ஆம்திகதி வரை பொறுப்பேற்கப்படும் எனவும் விண்ணப்பங்களை இணைய வாயிலாக சமர்பிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.