விடுதலைப் புலிகள்  அமைப்பின் தலைவர் உயிருடன் உள்ளார் என்ற பழ. நெடுமாறன் அவர்கள் நேற்று வெளியிட்ட கருத்து தொடர்பில்,   இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 பிரபாகரன்  2009 இல் விட்டார்,  போர்க்களத்தில் இருந்து அவரின் சடலத்தை மீட்டு எரித்தோம். அப்படியிருக்க,  அவர் எப்படி உயிருடன் இருப்பார்? என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய தெரிவித்துள்ளார்.

கடந்த யுத்தத்தில்,   பாதுகாப்பு அமைச்சின் செயலராகப் பணியாற்றிய  முன்னாள் ஜனாதிபதி  கோட்டாபய ராஜபக்ச இது தொடர்பில் ஊடகங்களிடம்  தெரிவிக்கையில்,

பிரபாகரன் மட்டுமல்ல அவரின் மனைவி, மகள், மூத்த மகன், இளைய மகன் ஆகியோரும் இறுதிப் போரில் உயிரிழந்துவிட்டார்கள்.

மனநோய் பிடித்தவர்கள் பிரபாகரனின் பெயரைப் பயன்படுத்தி அரசியல் செய்ய முனைகின்ற அதேவேளை, அவர்களில் சிலர் பிரபாகரனை உயிர்ப்பிக்கவும் முயற்சிக்கின்றனர்.

இந்த மனநோயாளர்களின் கருத்துக்குப் பதிலளிப்பது எமக்குத்தான் வெட்கக்கேடு எனவும் தெரிவித்துள்ளார். 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal