
எரிவாயு சிலிண்டர்கள் தொடர்பில் லிட்ரோ நிறுவனம் நீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ளது. அதன்படி சமையல் எரிவாயு சிலிண்டர்கள் SLSI தரத்திற்கு அமையவே உள்நாட்டு சந்தைக்கு விநியோகிக்கப்படுவதாக லிட்ரோ நிறுவனம் மேன்முறையீட்டு நீதிமன்றில் தெரிவித்துள்ளது.
லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் எரிவாயு நிறுவனங்களால் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ள எரிவாயு சிலிண்டர்களை மீளப் பெற உத்தரவிடுமாறு கோரி சிவில் சமூக ஆர்வலர் நாகாநந்த கொடித்துவக்கு தாக்கல் செய்த ரிட் மனு நேற்று அழைக்கப்பட்ட போது இந்த கால அவகாசம் வழங்கப்பட்டது ருவான் பெர்னாண்டோ மற்றும் சம்பத் விஜேரத்ன ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த மனு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
லிட்ரோ காஸ் நிறுவனத்திற்கு எதிராக வாதாடிய ஜனாதிபதி சட்டத்தரணி ஹர்ஷ அமரசூரிய, இந்த விடயம் தொடர்பில் சமர்பிக்க தனது வாடிக்கையாளருக்கு இதுவரை கால அவகாசம் வழங்குமாறு நீதிமன்றில் கோரினார்.
அதன்படி, லிட்ரோ கேஸ் நிறுவனம் இன்று நீதிமன்றத்தில் சமர்ப்பணங்களை தாக்கல் செய்த போதே இதனைத் தெரிவித்துள்ளது.