நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளும் 05 நாட்கள் நீண்ட விடுமுறைக்கு பிறகு இன்று முதல் திறக்கப்பட்டுள்ளன.
அதன்படி, வாடிக்கையாளர்களுக்கு வழக்கம் போல் வங்கிகளின் சேவைகள் வழங்கப்படவுள்ளன.
அதேநேரம், பங்குச் சந்தையும் 05 நாட்களுக்குப் பிறகு இன்று முதல் இயங்குகின்றது.
கடந்த வெள்ளிக்கிழமை உள்நாட்டு கடன் மறுசீரமைப்பிற்காக சிறப்பு வங்கி விடுமுறை வழங்கப்பட்டதுடன் கடந்த வியாழக்கிழமை முதல் வங்கிகள் மற்றும் பங்குச் சந்தை மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

Subscribe
Login
0 Comments