
நாளையதினம் (17-04-2023) அரச பாடசாலை விடுமுறை வழங்கப்பட்டு, அதற்கு பதிலாக வேறொரு திகதியில் கற்பித்தல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுமென பகிரப்படும் தகவல் உண்மைக்குப் புறம்பானது என கல்வி இராஜாங்க அமைச்சர் அ. அரவிந்த்குமார் தெரிவித்துள்ளார்.
நாளை வழமைபோல அரச பாடசாலைகளின் கல்விச் செயற்பாடுகள் இடம்பெறும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.