
நாமல் ராஜபக்ஷ ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில், டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் நிறுவன மேம்பாட்டு இராஜாங்க அமைச்சராக பதவியேற்றுள்ளார்.
அவர் இன்று (வியாழக்கிழமை ) பதவியேற்றுக்கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும் நாமல் ராஜபக்ஷ அமைச்சரவை அந்தஸ்துள்ள இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சராக உள்ளமை குறிப்பிடத்தக்கது.