திருக்கோவில் பிரதேச சங்கமன்கண்டி, தாண்டியடி பிரதேசத்தில் பிரதான வீதியில் நேற்று நள்ளிரவு திடீரென வைக்கப்பட்ட புத்தர் சிலை வைக்கப்பட்ட புத்தர் சிலை, இன்று அதிகாலை அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு புத்தர் சிலை வைக்கப்பட்ட செயற்பாட்டைக் கண்டித்து , பிரதேச மக்கள் வீதியில் அமர்ந்து நேற்று எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட தனால் அங்கு முறுகல் நிலைமை ஏற்பட்டது.
பொத்துவில்- கல்முனை பிரதான வீதியில் தாண்டியடிக்கும் சங்கமங்கண்டிக்கும் இடையிலான பிரதேசத்திலுள்ள காட்டுப் பிரதேசத்திலேயே இவ்வாறு புத்தர் சிலை திடீரென வைக்கப்பட்ட நிலையில் , பொத்துவில் பிரதேசத்திலுள்ள பிரபல பிக்குகள் சிலரும் அங்கு பிரசன்னமாகியிருந்தனர்.
இதனையறிந்த பிரதேச பொதுமக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள், நேற்று ஒன்று கூடி இச்செயற்பாட்டைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பொத்துவில் பிரதேச சபை தவிசாளர்ஏ.றஹீம், காரைதீவு பிரதேச சபை தவிசாளர் ஜெயசிறில், திருக்கோவில் பிரதேச சபை தவிசாளர் கமலராஜன் ஆகியோரும் காணப்பட்டனர்.
சிலை அகற்றப்படும் வரை இங்கிருந்து நகரப்போவதில்லையென போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்த நிலையில், சம்பவ இடத்தில் பொத்துவில் மற்றும் திருக்கோவில் பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில்
குறித்த சிலையை வைப்பதற்கு முறையான அனுமதியை பிரதேச சபையில் பெற்றிருக்கவில்லை எனத் தெரிவித்து, பொத்துவில் பொலிஸ் நிலையத்தில் பொத்துவில் பிரதேச சபையின் செயலாளர் முறைப்பாடொன்றினையும் பதிவு செய்திருந்தார்.
இவ்வாறான எதிர்ப்புகளையடுத்து சங்கமன்கண்டி பகுதியில் வைக்கப்பட்ட சிலையை இரண்டு நாட்களுக்குள் அங்கிருந்து அகற்றுவதாக பொலிஸார் நேற்று வாக்குறுதி வழங்கினர்.
இந்தப் பின்னணியிலேயே புத்தர் சிலை தற்போது சங்கமன்கண்டி பகுதியில் இருந்து அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளது.


