
தாய்ப்பாலானது குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையான சகல ஊட்டச்சத்துக்களும் சரிவிகித அளவில் நிரம்பிய ஆகாரமாகும். தாய்ப்பாலானது நோயெதிர்ப்பு சக்திமிக்கது. ஆரம்பத்தில் சுரக்கும் சீம்பால் (Colo strum) பலவகையான நோய்த் தாக்கங்களிலிருந்து குழந்தைக்கு பாதுகாப்பளிக்கும். தாய்ப்பாலானது இலகு வில் சமிபாடடையக்கூடிய பதார்த்தங்கள் நிரம்பியது. இலவசமாகக் கிடைக் கக்கூடிய பணச்செலவற்ற ஒன்றாகும்.தாய்ப்பாலூட்டும் கால அளவு
குழந்தை பிறந்து அரைமணித்தியாலத்திற்குள் தாய்ப்பாலூட்ட ஆரம்பிக்க வேண்டும்.குழந்தை பிறந்ததிலிருந்து ஆறுமாத காலம் வரை தனித்தாய்ப்பால் மட்டுமே ஊட்ட வேண்டும்.தாய்ப்பால் தவிர்ந்த வேறு எந்த ஆகாரமும் (நீர், கற்கண்டு, நீர், கொத்தமல்லி நீர் போன்றன) குழந்தையின் முதல் ஆறுமாத காலப் பகுதிக்குள் கொடுக்கக்கூடாது.தாய்ப்பாலூட்டலை குழந்தையின் இரண்டு வயது வரை தொடரலாம்.குழந்தை பிறந்து 06 மாத காலப்பகுதிக்குப் பின் உப உணவு ஊட்ட ஆரம்பிக்க வேண்டும். குழந்தைக்கு தாய்ப்பாலூட்டும் போது ஒரு மார்பகத்தால் 20 தொடக்கம் 30 நிமிடங்கள் வரை கொடுக்க வேண்டும். இரண்டு மணித்தியாலங்களுக்கு ஒரு தடவை தாய்ப்பாலூட்ட வேண்டும். குறிப்பாக நாள் ஒன்றிற்கு 08 தொடக் கம் 12 தடவைகள் தாய்ப்பாலூட்ட வேண்டும்.ஒரு தடவை ஒரு மார்பகத்தால் தாய்ப்பால் ஊட்ட வேண்டும். அடுத்த தடவை மற்றைய மார்பகத்தால் தாய்ப் பாலூட்ட வேண்டும்.ஒரு தடவை தாய்ப்பால் ஊட்டும் போது இரண்டு மார்பகங்களாலும் மாற்றி மாற்றி தாய்ப்பாலூட்டல் பயனற்றது.ஏனெனில் பாலுட்டும் போது ஆரம்பத்தில் நீர்த்தன்மையான பால் சிறிது நேரத்திற்கு வரும் பின்னர்தான் கொழுப்பு நிறைந்த பால் வரும். இரண்டு மார்பகங் களினாலும் மாற்றி மாற்றி கொடுக்கையில் நீர்த்தன்மை மிக்க பால் மட்டுமே குழந்தைக்கு கிடைக்கும். மாறாக கொழுப்புச்சத்து செறிந்த பால் கிடைக்காது. கொழுப்புச் செறிந்த பால் தான் குழந்தையின் வளர்ச்சிக்கும் நிறை அதிகரிப்புக்கும் காரணமாகும்.
தாய்ப்பாலூட்ட முன் தாய் கவனிக்க வேண்டியவை
தாய் சுத்தமான பாலூட்டக்கூடிய சௌகரியமான ஆடை அணிந்திருத்தல் வேண்டும்.மார்பகங்கள், காமக்கட்டுப்பகுதியை ஒவ்வொரு தடவை பாலூட்ட முன்பும் சுத்தமாகக் கழுவி வியர்வை மணமற்று வைத்திருத்தல் வேண்டும்.பாலூட்டும் தாய் போசாக்கு மிக்க உணவு உள்ளெடுத்தல் வேண்டும்.போதியளவு நீராகாரம் தாய் உள்ளெடுத்தல் வேண்டும். அமைதியான தனிமையான சூழலை தெரிவு செய்தல் சௌகரியமான தாயப்பாலுட்டலுக்கு வழிவகுக்கும். தமது வசதிக்கேற்ற ஓர் சௌகரியமான பாலூட்டும் நிலையை (உட்கார்ந்து / படுத்திருந்து) தாய் தெரிவு செய்தல் வேண்டும்.
தாய்ப்பாலூட்டும் போது கவனிக்க வேண்டியவை
தாயும் சேயும் செளகரியமான நிலையில் இருத்தல். தேவை ஏற்படின் தலையணையின் உதவியுடன் சௌகரியத்தை ஏற்படுத்திக்கொள்ளலாம். குழந்தையின் வாய் அகலத்திறந்திருத்தல் வேண்டும்.குழந்தையின் வாய் மார்பகத்துடன் தொடுகையில் இருக்கையில் குழந்தையின் கீழ் உதடு வெளி நோக்கித்திரும்பி இருத்தல் வேண்டும்.குழந்தையின் நாடி தாயின் மார்பகத்தை அழுத்தியவண்ணம் இருத்தல் வேண்டும்முலைக்காம்பு மற்றும் அதைச்சுற்றியுள்ள கருமை நிறமான பகுதியின் (ஏரி யோலா) பெரும்பகுதி குழந்தையின் வாயினுள் இருத்தல் வேண்டும்.மேற்கூறிய நிலையில் பாலூட்டுவதனூடாக குழந்தை சௌகரியமாகத் தாய்ப்பாலை பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருப்பதுடன் தாயின் மார்பகத்தில் வலி, வெடிப்பு போன்றவை ஏற்படாது.
தாய்ப்பால் போதியளவு குழந்தைக்கு கிடைக்கிறது என்பதை எவ்வாறு உறுதிப்படுத்திக் கொள்ளலாம்
குழந்தை தாய்ப்பால் அருந்திய பின் அழுகையை நிறுத்தல்.தாயாரின் மார்பில் காணப்பட்ட கனத்ததன்மை குழந்தைக்குப் பாலூட்டிய பின் அற்றுப்போதல். (பாரமற்றது போல் உணரல்).ஒரு நாளைக்கு குழந்தை குறைந்தது 06 தடவைகளாவது சிறுநீர் கழித்தல்.மாதாந்தம் குழந்தையின் நிறையை அளவிடு கையில் சீரான நிறை அதிகரிப்புக் காணப்படுதல்.
திருமதி.குயிலினி சுரேஷ்
தாதிய உத்தியோகத்தர்,
போதனா வைத்தியசாலை யாழ்ப்பாணம்.