4

hours ago
மகளை துஷ்பிரயோகம் செய்துவிட்டு தப்பிச் செல்ல முற்பட்ட தந்தையை காத்தான்குடி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் பாதிப்புக்குள்ளான சிறுமி காத்தான்குடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக இன்று காலை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலமுனை பகுதியில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. தனது 13 வயது மகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய தந்தை இரவோடு இரவாக கொழும்புக்கு தப்பிச் செல்வதற்காக காத்தான்குடி பேருந்து நிலையத்தில் பதுங்கியிருந்த போது காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி விஜயராஜா தலைமையிலான சந்தேக நபரை பொலிஸார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நபர் 36 வயதுடையவர் எனவும் அவரது மனைவி மத்திய கிழக்கு நாட்டில் பணிபுரிபவர் எனவும் பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.