
சுற்றாடலை பாதுகாக்கும் புதிய நடவடிக்கைகள் பலவற்றை பொதுமக்களின் ஒத்துழைப்புடன் ஆரம்பிப்பதற்கு எதிர்ப்பார்த்திருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
அதற்கமைய நாட்டில் இடம்பெறும் வன அழிப்பு உள்ளிட்ட சுற்றாடல் பாதிப்பு தொடர்பாக உடனடியாக செயல்பட்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பொலிஸ் தலைமையகம் நாட்டிலுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவித்துள்ளது.