சிறைச்சாலைகளில் பாதுகாப்பினை உறுதி செய்வதற்கு ட்ரோன் கமராக்கள் பயன்படுத்தப்பட உள்ளதாக சிறைச்சாலை திணைக்கள பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
சிறைச்சாலைகளில் பாதுகாப்பினை உறுதி செய்யவும் நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் இவ்வாறு ட்ரோன் கமரா கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

ட்ரோன் கமராக்களை பயன்படுத்துவது குறித்து சிறைச்சாலை உத்தியோகத்தர்களுக்கு விசேட பயிற்சி வழங்கப்பட உள்ளது.
சிறைச்சாலைக்குள் பாதுகாப்பினை உறுதி செய்வதே இந்த திட்டத்தின் பிரதான இலக்கு என தெரிவிக்கப்பட்டுள்ளது.