
சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் சர்வதேச அளவிலான விதி மீறல்களுடன் தொடர்புடைய இலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க ஐ.நா. உறுப்பு நாடுகள் முன்வரவேண்டும் என வலியுறுத்தியுள்ளதுடன் , தேசிய நீதிமன்றங்கள் ஊடாக சர்வதேச குற்றங்களுக்கான நீதியைப் பெற்றுக்கொடுப்பதை உறுப்புநாடுகள் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டுமெனவும் கோரியுள்ளது. நேற்றைய ஐ.நாவின் தீர்மானம் குறித்து இன்று (வியாழக்கிழமை) கருத்து வெளியிட்டுள்ள மனித உரிமைகள் கண்காணிப்பகம், இலங்கை தொடர்பான ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம் துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தகவல், பொறுப்புக்கூறல் மற்றும் நீதி ஆகியவற்றைப் பெற உதவும் வெற்றியாகும் எனவும் தெரிவித்துள்ளது.