
சமையல் எரிவாயு வெடிப்பால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு இழப்பீடு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் அண்மைக்காலமாக எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் அதிகம் இடம்பெற்று வந்தன. இதனால் பலர் பாதிப்புக்கு ஆளானார்கள். இந்த நிலையில் எரிவாயு வெடிப்புகளால் ஏற்பட்ட உடைமைகள் மற்றும் உபகரணங்கள் சேதத்திற்கு அரசாங்கத்தினால் உரிய நட்டஈடு வழங்கப்படும் என இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.
மேலும் பாதிப்புகள் குறித்து விசாரணையை முன்னெடுக்க ஜனாதிபதி அவர்களால் நியமிக்கப்பட்ட மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சாந்த வல்பொல தலைமையிலான எட்டு பேர் கொண்ட நிபுணர் குழு தனது அறிக்கையை ஒரு வார காலத்துக்குள் வெளியிடவுள்ளது.