சப்ரகமுவ மாகாண ஆளுநராக பதவிவகித்த டிக்கிரி கொப்பேகடுவ, ஆளுநர் பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளதை அடுத்து ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை, முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்கவைக் கொண்டு நிரப்புவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அறியமுடிகின்றது.
அவருக்கான நியமனக்கடிதம் 13ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வழங்கப்படும் என ஜனாதிபதியின் ஆலோசகர் தெரிவித்துள்ளார்.