நாட்டில் பல்வேறு நபர்கள் சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடுவதும் பல்வேறு வழிகளில் சொத்துக்களை அபகரிப்பதும் அவதானிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சட்டவிரோத சொத்துக்கள் மற்றும் சொத்துக்கள் தொடர்பான விசாரணைப் பிரிவினரால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரியவருகிறது. 1917 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக பொதுமக்கள் புலனாய்வுப் பிரிவிற்கு தகவல்களை வழங்க முடியும் என பொலிஸார் தெரிவித்தனர்.
அவசரகால எண் 24 மணித்தியாலமும் செயல்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.
தனிப்பட்ட பிரச்சினை காரணமாக தவறான தகவல்களை வழங்கியவர்கள் மீது குற்றஞ்சாட்டப்படும் என பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
