
ரூபாயின் பணமதிப்பிழப்பு காரணமாக இலங்கையில் பணவீக்கம் 74 சதவீதமாக உயர்ந்துள்ளதாக அமெரிக்காவின் ஜோன்ஸ் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஸ்டீவ் ஹாங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பேராசிரியரான ஸ்டீவ் ஹான்கி, நிதி நெருக்கடியில் உள்ள நாடுகளின் பொருளாதார காரணிகளைக் கருத்தில் கொண்டு இந்த ஆண்டு பணவீக்கக் குறியீட்டைக் கணக்கிட்டுள்ளார்.