
கோப் குழுவால் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 25ஆம் திகதி காலை 10.00 மணிக்கு ஆஜராகுமாறு அழைக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் தற்போதைய செயற்பாடுகள் குறித்து விசாரணை செய்வதற்காக அழைக்கப்பட்டிருப்பதாக கோப் குழு தலைவர் சரித ஹேரத் தெரிவித்துள்ளார்.
அதன்படி 21 விமானங்களை குத்தகைக்கு எடுப்பதற்காக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் ஏலத்தில் ஈடுபட்டுள்ளமை தொடர்பில் ஆராய்வதற்காக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை கோப் குழு முன்னிலையில் அழைக்கவுள்ளதாக கோப் குழுவின் தலைவர் கடந்த 19ஆம் திகதி நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.