கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக கடுமையான வாகன போக்குவரத்து ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இலங்கை மின்சாரசபை, துறைமுக ஊழியர்கள் முன்னெடுத்துவரும் போராட்டம் காரணமாகவே இவ்வாறு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
எனவே, தற்போது ஓல்கோட் மாவத்தை பகுதியில் வீதியின் ஒரு பக்கத்தில் மாத்திரமே போக்குவரத்து நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.