
கோடை காலங்களில் சுற்றுப்புறமும் சூடாக இருப்பதால் உடலில் ஈரப்பதம் குறைந்து, சோர்வு, உடல்வலி, தலை, கால் வலி, கொப்புளங்கள் போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வெயில் காலத்தில் குளிர்ச்சிக்காக ‘கூல்டிரிங்ஸ்’ குடிப்பது நல்லதல்ல, மேலும், அவை ஜீரண சக்தியை குறைக்கும் தன்மை கொண்டவை . குடித்த உடன் குளிர்ச்சி கிடைப்பதுபோல இருந்தாலும் அஜீரணத்துக்கு வழிவகுக்கும்.
வெயில் காலத்தில் உடல் உஷ்ணத்தை குறைத்து உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள தினமும் 12 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். இதில் 4 டம்ளர் தண்ணீர் தவிர்த்து, மற்றவை திரவ பானங்களாக இருந்தால் மிகவும் நல்லது.
மேலும், கோடைகாலத்தில் பகல் பொழுது நீண்டும், இரவுப் பொழுது குறைவாகவும் இருக்கும். எனவே பகலிலும் கொஞ்ச நேரம் ஓய்வு எடுத்தால் உடல் ஆரோக்கியம் பெறும்.