
கொழும்பு – பொறளை நகரில் உள்ள நகையகம் ஒன்றில் கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் இன்று பிற்பகல் வேளையில் நடந்துள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
முகத்தை முழுமையாக மறைக்கும் வகையிலான முகக்கவசம் அணிந்து உந்துருளியில் பிரவேசித்த இரண்டு பேர் துப்பாக்கியால் வானை நோக்கிச் சுட்டு, அங்கிருந்தவர்களை அச்சுறுத்தி விட்டு கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
சம்பவ இடத்துக்கு காவல்துறை செல்வதற்கு முன்னதாக அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இதனையடுத்து சந்தேகநபர்களை சி.சி.ரிவி கமராவின் மூலம் அடையாளம் கண்டு, கைது செய்வதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.