
இலங்கையின் தலைநகரில் கடந்த சில நாட்களாக குறைந்திருந்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 313 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு ஏற்பட்டால் நிலைமை மீண்டும் மோசமடையக் கூடும் என சுகாதார தரப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.