
இலங்கையில் பொருளாதார பிரச்சினையினால் மக்கள் பாரிய நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். அரசாங்கத்திற்கெதிரான ஆர்ப்பாட்டங்கள் மேலும் மேலும் தலைதூக்கிய வண்ணம் உள்ளது.
காலிமுகத்திடலில் இன்று நான்காவது நாளாகவும் போராட்டம் தொடர்கிறது. இந்நிலையில் நேற்றைய தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் ஆர்ப்பாட்ட வளாகத்திற்கு ‘கோட்டா-கோ-கம’ (கோட்டகோகம) என்ற பெயரில் முகாம் ஒன்றை அமைத்துள்ளனர்.
தங்குமிட, கழிப்பறை, மருத்துவ , குடிநீர், நூலகம் என அங்கு அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அவ்விடம் கூகுளின் வழிகாட்டலிலும் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.