
இரு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சீனாவில் நாளாந்த கொரோனா நோய்த்தொற்று எண்ணிக்கை உயர்வடைந்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் 3,393 ஆக, எண்ணிக்கை பதிவாகியுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
புதிய கொரோனா அலை காரணமாக குறிப்பாக வடகிழக்கு சீனாவின் பல நகரங்களிலும், ஷாங்காய் நகரிலும் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.
ஜிலின் நகரம் பகுதியளவில் மூடப்பட்டுள்ளதுடன், அதன் அருகிலுள்ள பல பகுதிகளிலும் போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
சீனாவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸின் பரவல் நிலை பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டாலும், புதிய கொரோனா அலை உருவானமையால், பரிசோதனைகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.