
யாழ்ப்பாணம். மல்லாகத்தை சேர்ந்த குடும்பஸ்தர் பிரான்ஸில் கொலை செய்யப்பட்டு சடலம் குப்பை மேட்டில் வீசப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த நபர் காணாமல் போனதாக கூறப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் (26) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் வசிக்கும் அவரது மனைவிக்கு அவர் பணிபுரியும் வீட்டின் தொலைபேசி இலக்கம் மற்றும் முகவரியை வழங்கியுள்ளார்.
இந்நிலையில், கடந்த வாரம் மனைவி,. கணவரைத் தொலைபேசியில் அழைத்தபோது, சில நாட்களாக அவரைக் காணவில்லை என குறித்த வீட்டினர் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து , காணாமல்போன கணவரை கண்டுபிடித்து தருமாறு பிரான்ஸ் நாட்டு அதிகாரிகளிடம் மனைவி வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில் விசாரணை நடத்திய பிரான்ஸ் பொலிஸார் , அவர் கொலை செய்யப்பட்டதைக் கண்டுபிடித்துள்ளனர்.
இதனையடுத்து இறந்தவர் பணிபுரிந்த வீட்டின் ஏனைய ஊழியர்களிடம் விசாரணை நடத்தியதுடன் சிசிரிவி கமெரா சோதனையில் அவர் எப்படி வெட்டிக் கொல்லப்பட்டார் என்பதும் தெரிய வந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் குறித்த வீட்டின் உரிமையாளரை சந்தேகத்தில் கைதுசெய்து விசாரணை நடத்தியபோது, உயிரிழந்த இலங்கையரின் சடலம் குப்பை மேடு ஒன்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.