
கிளிநொச்சி மாவட்டத்தில், கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரையான காலப் பகுதியில், மாவட்ட மதுவரி திணைக்களத்தால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் போது, 190 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு, வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக, மாவட்ட மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு கைதானவர்களில் , கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட 02 பேரும், கசிப்பு உடைமையில் வைத்திருந்த 34 பேரும், பிறநாட்டு குடி வகைகளை வைத்து இருந்த 03 பேரும் ,கசிப்பு உற்பத்தி காரணம் வைத்திருந்ததை 03 பேரும் கைதாகியுள்ளனர்.
அத்துடன், கோடா வைத்திருந்த ஒருவரும், அனுமதிப்பத்திரம் இன்றி கள் விற்பனை செய்தமை மற்றும் உடமையில் வைத்திருந்தமை போன்ற குற்றச்சட்டுகளில் 147 பேரும் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகின்றது.