
கிளிநொச்சி மாவட்டத்தின் பாடசாலை ஒன்றில் நடத்தப்பட்ட திடீர் சோதனையில் 10 மாணவர்கள் போதைப் பொருட்களுடன் பிடிபட்டனர்.
நேற்றைய தினம் கிளிநொச்சி புறநகரிலுள்ள பாடசாலை ஒன்றில் விழிப்புணர்வு நடவடிக்கையாக பாடசாலை நிர்வாகம், பிரதேச பொது அமைப்புகள் இணைந்து விழிப்புணர்வு நடவடிக்கையை முன்னெடுத்தன.
இதன்போது, 10 மாணவர்களின் புத்தகப் பைகளில் இருந்து போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இந்தப் போதைப் பொருட்களை வைத்திருந்தவர்கள் 15 வயதுடையோராவார்.
பிடிப்பட்ட மாணவர்கள் அனைவரும் கிளிநொச்சி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.