
நாட்டில் நகர்ப்புறங்களை விட கிராமங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில்,
தொடக்கத்தில் கிராமங்களை காட்டிலு நகர்ப்புறங்களில் கொரோனா தொற்று பரவல் அதிகம் இருந்து வந்த நிலையில் தற்போது அதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதற்கு மக்களின் அவதானமின்மையே காரணமா என அவர் தெரிவித்தார்.
இதற்கு பின்பும் மக்கள் எச்சரிக்கையுடன் இல்லையெனில் நாட்டினை முடக்குவதை தவிர வேறு வழியில்லை என தெரிவித்தார்.