
வீடொன்றில் இடம்பெற்ற காஸ் விபத்து சம்பமொன்றில் எரிகாயங்களுக்கு உள்ளான நிலையில், சிகிச்சை பெற்றுவந்த பெண், நேற்றையதினம் உயிரிழந்துள்ளார்.
மாத்தளை, உடுபிஹில்ல பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட எச்.எம். சந்திரகுமாரி என்ற பெண்ணே இவ்வாரு மரணமடைந்தார்.
கடந்த மாதம் 19ஆம் திகதியன்று காஸ் அடுப்பு பற்றவைக்க முயற்சித்த வேளையிலேயே இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளதென பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
காயமடைந்த பெண், மாத்தளை பெரியாஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், சத்திரசிகிச்சை பிரிவில் இரண்டு வாரங்கள் அனுமதிக்கப்பட்டு இரண்டு நாட்களுக்குப் பின்னர், வீட்டுக்கு திரும்பிவிட்டார்.
மீண்டும் பரிசோதனைக்கு வைத்தியசாலைக்கு அப்பெண், நேற்று வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டதில், சீனியில் மட்டம் குறைந்து பெண்ணுக்கு சிகிச்சையளிக்கும் போதே மரணமடைந்துவிட்டார்.