யாழ். காங்கேசன்துறையில் இருந்து காரைக்கால் நோக்கிய படகுச்சேவை திட்டமிட்டபடி ஏப்ரல் மாத இறுதியில் ஆரம்பிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இச்சேவைக்கான முனையப் பணிகள் முடிவு நிலையில்  நடைபெற்று வருவதாக  Indsri Ferry Service Pvt Ltd இன் தலைவர் நிரஞ்சன் நந்தகோபன் சண்டே ரைம்ஸிடம் தெரிவித்துள்ளர்.

4 மணித்தியால பயணமாக அமையும் எனவும் பயணி ஒருவர் 100 கிலோ எடையுள்ள பொருட்கள் கொண்டு வர முடியும் எனவும் தெரிவித்துள்ளதுடன் இதற்கான கட்டணமாக 50 அமெரிக்க டொலர் அறவிடப்படும் எனவும் அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வா தெரிவித்திருந்ததாக கூறப்படுகிறது. 

இச்சேவை ஞாயிறு தவிர்த்த ஏனைய நாட்களில் நடைபெறும்  எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal