
தேவையான பொருட்கள்:
- கரட் – 100 கிராம்
- பால் -50 கிராம்
- சர்க்கரை – 50 கிராம்
- முந்திரிப்பருப்பு-10 எண்ணம்
- திராட்சை -10 எண்ணம்
- ஏலக்காய் – 4 எண்ணம்
செய்முறை:
- கரட்டைச் சிறு துண்டுகளாக நறுக்கி சிறிதளவு தண்ணீரில் வேக வைக்கவும்.
- வேகவைத்த கரட்டை விழுதாக அரைக்கவும்.
- ஒரு பாத்திரத்தில் சிறிதளவு நெய் ஊற்றிக் காய்ந்ததும் அதில் கரட் விழுதைப் போட்டு அதன் பச்சை வாசனை போக வதக்கவும்.
- அத்துடன் சர்க்கரை, கரட் வேகத் தேவையான தண்ணீர், பால் சேர்த்து வேக வைக்கவும்.
- நன்றாகக் கொதித்து வரும்போது ஏலக்காய்த்தூள் தூவி இறக்கவும்.
- ஓரு சட்டியில் நெய் ஊற்றிக் காய்ந்தவுடன், அதில் முந்திரிப்பருப்பு, திராட்சை போட்டு வதக்கிப் பாயாசத்துடன் சேர்க்கவும்.