
இன்று (ஞாயிற்றுக்கிழமை) கவிச்சக்கரவர்த்தி கம்பனின் நினைவு தினம், வவுனியா நகரப்பகுதியிலுள்ள கம்பனின் உருவச்சிலைக்கு அடியில் தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் செ.சந்திரகுமார் தலைமையில் நடைபெற்றது.
குறித்த நிகழ்வின் போது கம்பனின் உருவச் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு, அங்கு வருகை தந்திருந்த அனைவரினாலும் அஞ்சலி செலுத்தப்பட்டது.
வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியின் விரிவுரையாளர் பார்த்தீபனால் சிறப்புரையும் நிகழ்த்தப்பட்டது.