Subscribe
Login
0 Comments
“முயற்சியே உன் வளர்ச்சி”
கிழக்கு மாகாணத்தில் அடிப்படை வசதிகள் இன்றி தினமும் வாழ்வதற்காக போராடும் நிலையில் துன்பங்களை சுமந்தவாறு இன்றும் பல குடும்பங்கள் வாழ்கின்றன என்பது வேதனை அளிக்கின்றது
அந்தவகையில் மனிதநேய அடிப்படையில் மிகவும் வறுமையோடு போராடும் சில குடும்பங்களை தேர்ந்து எடுத்து SCSDO உதவி வரும் நிலையில்
அதன் அடிப்படையில் கொம்மாதுறை என்ற இடத்தில் வசித்து வரும் திருமதி வள்ளி நாயகி என்பவருக்கு உதவிகள் எதுவும் சரியாக கிடைக்காத நிலையிலும் பெண்ணை தலமைத்துவமாக கொண்டு தனது 72 வயதுடைய தாயாரையும் 7வயதுடைய மகளையும் மிளகாய்ப் தூள் தயாரித்து அதை விற்று தமது அன்றாட வாழ்வை நகர்த்தி வருகின்றார்
அதில் வரும் வருமானம் தனது குடும்பத்திற்கு போதாமல் இருப்பதை அறிந்து அவர் செய்து வரும் சுயதொழிலுக்கு மேலும் ஊக்கம் கொடுக்கும் வகையில் அவருக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்ததுடன் அவர் மகளின் பெயரில் சிறிய தொகை பணத்தை சேமிப்பில் இட்டு ஊக்கப் படுத்தப்
பட்டுள்ளது
பயனாளி தமது சொந்த முயற்சியில் இந்த உதவியினை சரியாக பயன்படுத்தும் பட்சத்தில் அவருக்கு இரண்டாம் கட்ட உதவிகள் வழங்கி மேலும் அவர்கள் எதிர்காலம் மேம்பட உதவுவோம் எனவும் வாக்குறுதி அளிக்கப் பட்டுள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கது.
மற்றும் இதற்காக அற்பணிப்போடு நல் உள்ளத்தோடும் உழைத்து வரும் உறவுகள் யாவருக்கும் SCSDO வின் நன்றிகள்
i am admin of scsdor