
பெட்டர் டாட் காம் என்ற வலைத்தளத்தில் பணிபுரியும் 900 நபர்களை பணி நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
பெட்டெர் டாட் காம் நிறுவனத்தின் வாயிலாக புரோக்கர் கட்டணமின்றி நிலம்,வீடு வாங்க கடன் வசதியினை பெறலாம். மேலும் இந்தியாவில் இந்த நிறுவனம் அதிவேக வளர்ச்சியும் அடைந்த துறையாகும்.
இந்த நிலையில் அந்நிறுவனத்தின் சிஇஒ விஷால் கர்க் அவர்கள் மூன்று நிமிட வீடியோ காலில் 900 பெயரை பணி நீக்கம் செய்து அதிர்ச்சியளித்துள்ளார்.
அந்த ஜூம் வீடியோ காலில் அவர் கூறியதாவது
,”இந்த செய்தியை நீங்கள் யாரும் கேட்க விரும்பப்போவதில்லை, ஆனால் அந்த முடிவை எடுத்துதான் ஆக வேண்டும், இந்த முடிவை நான் எடுப்பது இது இரண்டாவது முறை, முதல் முறை நான் அழுதேன், ஆனால் இம்முறை வலிமையோடு இருப்பேன் என்று நினைக்கிறேன்.
எனக்கும் இந்த முடிவை எடுப்பதில் விருப்பம் இல்லைதான், ஆனால் இது முக்கியமான முடிவாக இருக்கும். நீங்கள் இந்த வீடியோ காலில் இருக்கிறீர்கள் என்றால், துரதிர்ஷ்டவசமானவர்கள் என்று அர்த்தம். இதில் இருக்கும் அத்தனை பேரும் உடனடியாக பணிநீக்கம் செய்யப்படுகிறீர்கள். உங்களுக்கே தெரியும் இதில் 250 பேருக்கு மேல் 8 மணி நேர வேலைக்கான சம்பளம் வாங்கிக்கொண்டு 2 மணி நேரம் மட்டுமே வேலை பார்க்கிறீர்கள் என்று.
அவர்கள் நிறுவனத்திடம் இருந்தும் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களிடம் இருந்தும் திருடுகிறார்கள் என்று அர்த்தம். எனவே இந்த நிறுவனத்தில் இருந்து 15 சதவீத பணியாளர்கள் நீக்கப்படுகிறார்கள்” என்று விஷால் கார்க் கூறியிருக்கிறார்.
இந்த பணி நீக்கமானது முறையான ஆராய்தலுக்கு பிறகே எடுக்கப்பட்ட முடிவாகும் என கூறப்படுகிறது.