
வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன, ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட விதம் ஏற்புடையதல்ல எனத் தெரிவித்துள்ளார்.
சற்று முன்னர் ஊடகவியலாளர்களிடம் அவர் இந்த விடயத்தைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றிய பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளினால் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க முடியவில்லை எனவும்
நாடு ஒன்றை குறிப்பிட்டு தீர்மானம் நிறைவேற்றப்படும் போது அந்த நாட்டின் இணக்கப்பாடு அவசியமானது எனவும் அவ்வாறு இன்றி தீர்மானம் நிறைவேற்றப்பட முடியாது எனவும் 25 ஐ விடவும் குறைவான நாடுகளே தீர்மானம் நிறைவேற்றியுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.