
ஜப்பானில் 2021 ஆம் ஆண்டு ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டித் தொடரில் பெட்மின்டன் ( பூப்பந்து)போட்டிக்கான மத்தியஸ்தர் குழாமில் தொழிநுட்ப அலுவலராக பசறை தமிழ் தேசிய பாடசாலை ஆசிரியை தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், பசறை தமிழ் தேசிய பாடசாலையைச் சேர்ந்த விளையாட்டுத் துறை ஆசிரியை ராஜேந்திரன் அகல்யாவை பாராட்டும் நிகழ்வு பசறை – கோணக்கலை தமிழ் ஆரம்ப பாடசாலையில் அதிபர் சுப்ரமணியம் ரமேஷ் தலைமையில் (30) இடம் பெற்றது.
இப்போட்டித்தொடரின் தொழில்நுட்ப அலுவலராகஇலங்கையில் இருந்து தெரிவு செய்யப்பட்டு எமக்கெல்லாம் பெருமை சேர்த்துள்ள மலையகத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் அகல்யாவுக்கு கல்வி சமூகமும் விளையாட்டு ஆர்வலர்களும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.