நாட்டில் எரிவாயு சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், சில தேவைகளுக்காக மட்டும் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி கைத்தொழில் மற்றும் மயான பயன்பாட்டிற்காக எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க இரண்டு எரிவாயு நிறுவனங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நுகர்வோர் விவகார அதிகார சபையினால் லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் எரிவாயு நிறுவனங்களுக்க இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதேவேளை , வீட்டுப் பாவனைக்காக சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க தொடர்ந்தும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
லிட்ரோ கேஸ் லங்கா லிமிடெட் மற்றும் லாஃப்ஸ் கேஸ் பிஎல்சி ஆகிய நிறுவனங்களுக்கு உள்நாட்டு LP எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை இடைநிறுத்துமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண நேற்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், கைத்தொழில் மற்றும் மயான பயன்பாட்டிற்காக மாத்திரம் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.