
நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போது எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஈஸ்டர் தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகளை வெளிக்கொணர அரசியல் பேதங்களை கடந்து புதிய திட்டத்தை தொடங்குமாறு கூறினார்.
செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பின்னால் உள்ள சூத்திரதாரிகளை அடையாளம் கண்டு தண்டிக்க அமெரிக்க அரசு எடுத்த நடவடிக்கைகளை இலங்கை ஒரு உதாரணமாக கொள்ளவேண்டும் என அவர் கூறினார்.
மேலும் இரட்டை கோபுர தாக்குதல் தொடர்பாக சுயாதீன ஆணைக்குழுவை நியமித்து அவர்களின் பரிந்துரைகளை அமுல்படுத்தியதன் மூலம் ஆராயப்பட்டதாகவும் சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில் ஈஸ்டர் தாக்குதல்களின் முக்கிய சூத்திரதாரி ஓடி மறைவதற்கு முன், உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தை சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.