
மாரவில புஜ்ஜம்பொல கண்டி வீதியில் உயிரிழந்த நபர் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பிரதேச மக்கள் வழங்கிய தகவலுக்கமைய 1990 அம்பியுலன்ஸ் சேவை ஊடாக மாரவில வைத்தியாசாலையில் இந்த சடலம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பின்னர் மேற்கொள்ளப்பட்ட பீசீஆர் பரிசோதனையில் இந்த நபருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. தனியாக வாழந்த இந்த நபர், 50 வயதுடையவர் எனவும் தேங்காய் உடைப்பதனையே தொழிலாகவும் அவர் செய்து வந்துள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.