
உயர்தர விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணியை அடுத்த சில தினங்களில் ஆரம்பிப்பது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தங்களது கோரிக்கைகளுக்கு அரசு சாதகமான பதிலைப் பெற்று வருவதாக அதன் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
இதன்படி, எதிர்வரும் சில தினங்களுக்குள் தமது சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களும் கூடி கலந்துரையாடி இறுதித் தீர்மானம் எடுத்து பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கத்தின் ஈடுபாடு தொடர்பில் அறிக்கை வெளியிடவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் செயற்பாடுகள் தொடர்பில் பல்கலைக்கழக விரிவுரையாளர்களுடன் கூடிய விரைவில் கலந்துரையாடவுள்ளதாக அகில இலங்கை ஐக்கிய ஆசிரியர் சங்கத் தலைவர் யல்வெல பஞ்ஞாசேகர தேரர் தெரிவித்துள்ளார்.