
உயர்தர பரீட்சை – 2021க்கான பெறுபேறுகளை மீள்திருத்தம் செய்வதற்கான விண்ணப்பங்கள் நாளை முதல் ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, குறித்த விண்ணப்பங்களை நாளை முதல் இணையவழி வாயிலாக அனுப்பிவைக்க முடியும் எனவும் நாளை முதல் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை மீள்திருத்தப்பணிகளுக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் எல். எம் . டீ. தர்மசேன தெரிவித்துள்ளார்.
பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பபூர்வ இணையத்தளத்திற்குள் பிரவேசிப்பதன் வாயிலாக விண்ணப்பங்களை அனுப்பிவைக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.